Prev my images Next

Tuesday, April 13, 2021

ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் 20 ஆவது ஆண்டுவிழா


.                                            👆👆👆👆

19.04.2021 அன்று பிற்பகல் ஐரோப்பிய நேரம் 16 மணிக்கு இந்திய நேரம் 19.30 க்கு ஜெர்மனி எழுத்தாளர் சங்கம் 20 ஆவது ஆண்டு விழாவினை நடத்தவுள்ளது. zoom வழி  நடைபெறும் இவ்விழாவுக்கு அனைவரும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள் 

சிறப்புரைகள் 

நடன நிகழ்வுகள் 

பட்டிமன்றம்போன்றன இடம்பெற இருக்கின்றன.😀😀😀


Saturday, February 20, 2021

இணையவழி நடத்தும் நினவஞ்சலி நிகழ்வு 21.02.2021

 யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் இணையவழி நடத்தும் நினவஞ்சலி நிகழ்வு.

எமைவிட்டுப் பிரிந்த மூன்று ஈழத்தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கான அஞ்சலி நிகழ்வானது
எதிர்வரும் 21.02.21 ந்திகதி zoom செயலியூடாக நடைபெறவுள்ளது. தமிழிலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுகிறீர்கள்
Meeting-ID: 987 394 3047
Kenncode: ZKA6v1மல்லிகை இதழ் ஆசிரியரும் எழுத்தாளருமாகிய டொமினிக் ஜீவா அவர்களின் நினைவலைகளை மீட்ட ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர்.தி.ஞானசேகரம் அவர்களை அழைத்திருக்கின்றோம். அவரை எம்முடைய சங்க உபதலைவர் பொன்னுத்துரை சிறி ஜீவகன் அவர்கள் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் அழைத்து வருவார் .வண்ணை தெய்வம் என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் தெய்வேந்திரம் நாகேந்திரம் அவர்களின் நினைவேந்தலை எடுத்தவருகின்றார் எழுத்ததாளரும் சிறுகதை ஆசிரியருமான மனோ சின்னத்துரை அவர்களை அவரை அழைத்து வருபவர் எமது சங்கப் உதவிப் பொருளாளர் ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்கள்.


ஜெமினி என்று அழைக்கப்படும் அமரர் கனேஷ் கெங்காதரன் அவர்கள் நினைவலைகளைத் தாங்கி வருபவர் அறுவை என்னும் பத்திரிகை ஆசிரியர் வை.லோகநாதன் அவர்கள். அவரை அழைத்து வருபவர் எம்முடைய சங்க ஆலோசகர் வைரமுத்து சிவராஜா அவர்கள்

தலைமையுரையை எம்முடைய சங்கத்தின் தலைவர் அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் வழங்க வரவேற்புரையை சங்க உறுப்பினர் சாந்தினி துரைரங்கன் அவர்களும் நன்றியுரையை சங்கப் பொருளாளர் கீதா பரமானந்தன் அவர்கள் வழ்ங்குகின்றார்.

இந்நிகழ்வை சங்கச் செயலாளர் சந்திரகௌரி சிவபாலன் (எ) கௌசி ஒருங்கிணைப்புச் செய்கின்றார்
Wednesday, October 28, 2020

அமரர் கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி


எமது சங்கத்தின் அங்கத்தவர்களில் ஒருவராகச் சுமார் 15 ஆண்டுகள் இருந்திருந்து இச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பல விழாக்களில் கலந்துகொண்டு சொற்பொழி வாற்றியிருக்கிறார். இலங்கைப் இனப்போர் முடிந்து (18.05.2009) இலங்கையில் நடைபெற்ற அகில உலக எழுத்தாளர் மாகாநாட்டில் (10.01.2011) யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இலங்கை¸ இந்தியா¸ ஐரோப்பா¸ கனடா போன்ற நாடுகளிலிருந்து யேர்மனிக்கு வருகைதரும் எழுத்தாளர்களைக் கௌரவிப்பு வழங்கும்¸ மற்றும் நூல்களின் வெளியீட்டு விழாக்களிலும் பல தடவைகள் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். இப்படியாக இவர் செய்த பணிகளின் சிறப்பைக் கண்ட எமது எழுத்தாளர் சங்கம் “வாழும்போதே தமிழுக்குப் பணிபுரிந்தவர்களைக் கௌரவிக்க வேண்டும்” என்ற நல் நோக்கில் யேர்மனிவாழ் ஐந்து மூத்த எழுத்தாளர்களைக் சிறப்பிக்கும் நிகழ்வில் (27.04.2014) திரு பத்மபணசீலன் அவர்களையும் அழைத்து பொன்னாடை போர்த்தி பூமாலை அணிந்து பாராட்டிக் கௌரவம் செய்த பொன்னான நிகழ்வினை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றோம்

Saturday, October 17, 2020

இணைய வழி எழுத்தாளர் சந்திப்பு 1


                            எழுத்தாளர் சந்திப்பு  அறிவித்தல்  அன்புடையீர் 

ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம். இவ்வருடம் இணைய வழிக் கலந்துரையாடலை 23.10.2010 அன்று ஜெர்மனிய நேரம்  மாலை 19.00  மணிக்கு மேற்கொள்ள இருக்கின்றது.  இக்காலந்துரையாடலில் உலகத் தமிழர் அனைவரும் கலந்து சிறப்பிக்கும் வகையில் zoom இணைப்பை மேற்கொண்டிருக்கின்றது.  👐👐

இந்நிகழ்வில் கொரொனா நுண் கிருமித்தாக்கத்தினால் மனித மனங்கள் என்னும் தலைப்பில் பின்வரும் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் உரையாற்ற இருக்கின்றார்கள். 

ஜெகதீஸ்வரி மகேந்திரன் 

கீதா பரமானந்தன் 

ஜெயா நடேசன் 

சாந்தினி துரைரங்கன் 

சி.சிவாவினோபான் 

நெடுந்தீவு முகிலன் 

இந்நிகழ்வில் கீழ்தரப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி zoom இல் அனைவரும் இணைந்து கொண்டு உங்கள் கருத்துக்களைப் பரிமாறுங்கள். 

தமிழால் இணைவோம். தரணியில் தமிழ் மணம் ஓங்கச் செய்வோம் 

https://us04web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09

Tuesday, November 5, 2019

"பறவையாய் அவளை மாற்றிப் பார்ப்போமா" கவிதை நூல் அறிமுகம்


ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், எழுத்தாளர் மீரா அவர்களுடைய "பறவையாய் அவளை மாற்றிப் பார்ப்போமா'' என்னும் கவிதை நூலை அறிமுகம் செய்ய இருக்கின்றது . இது எதிர்வரும் 30.11.2019 அன்று Leopold Straße 50 - 58. 44147 Dortmund என்னும் முகவரியில் பிற்பகல் 14 மணியளவில் நடைபெற இருக்கின்றது.  எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், வாசகர்கள், அனைவரும் எழுத்தாளரை ஊக்குவிக்கும் வகையில்  கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்