எழுத்தாளரை பிரதம விருந்தினர் கௌரவிக்கின்றார்
பிரதம விருந்தினரை எழுத்தாளர் கௌரவிக்கின்றார்
10.06.2018 அன்று கீத்தா பரமானந்தன் அவர்களுடைய முகவரி என்னும் கவிதை நூலும் சுவடுகள் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலும்
10.06.2018 அன்று கீத்தா பரமானந்தன் அவர்களுடைய முகவரி என்னும் கவிதை நூலும் சுவடுகள் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலும்
öffentlicher Begegnungstätte Kevelaer, Bury St. Edmund Str , 47623 Kevelaer(ஜேர்மனி) என்னும் இடத்தில் ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் மிக விமர்சையாக நடைபெற்றது.
எழுத்தாளர் கௌசி அவர்களை கீத்தா பரமானந்தன் அவர்கள் கௌரவிக்கின்றார்
இந்நிகழ்ச்சி முழுவதினையும் ஈ.ரி.ஆர் வானொலி அதிபர் இரவீந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார். இந்நிகழ்வுக்கு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத் தலைவர் வ.சிவராசா அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக இலங்கையிலிருந்து கலாநிதி அனுஷியா சத்தியசீலன் (கல்வியியல் துறை, யாழ் பல்கலைக்கழகம்) வருகை தந்திருந்திருந்தார். சிறப்பு விருந்தினராக கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் (வெற்றிமணி ஆசிரியர்) வருகை தந்திருந்தார். எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என மண்டபம் நிறைந்த கூட்டத்துடன் மங்களவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.
ஜேர்மனி கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீ ஜீவகன் அவர்கள்
பிரதம விருந்தினர் கலாநிதி அனுஷியா சத்திய சீலன்
சிறப்பு விருந்தினர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன்
எழுத்தாளர் ஏலையா முருகதாஸ்
மங்கள விளக்கேற்றல் எழுத்தாளர் வசந்தா ஜெகதீசன்
சங்கீத ஆசிரியை கலைவாணி ஏகானந்தராஜா
கீதா பரமானந்தன் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை சங்கீத ஆசிரியை கலைவாணி ஏகானந்தராஜா அவர்கள் பாடினார். அபிதா ரமேஸ் வரவேற்பு நடனம் வழங்கினார். தலைமையுரையை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் வ.சிவராஜா அவர்கள் வழங்கினார்.
செல்வி வேதிகா ஜெகதீசன்
வரவேற்புரையினை ராம் பரமானந்தன் அவர்களும் சிறுகதை நூல் அறிமுகத்தினை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளர் பொன். புத்திசிகாமணி அவர்களும்இ சிறுகதை நூல் விமர்சனத்தினை எழுத்தாளரும் ஜேர்மனி தமிழ் எழுத்தாளா சங்க செயற்குழு உறுப்பினருமாகிய சந்திரகௌரி சிவபாலன்(கௌசி) அவர்களும் கவிதை நூல் அறிமுகத்தினை ஜேர்மனி எழுத்தாளர் சங்க பொருளாளர் கவிஞர் அம்பலவன் புவனேந்திரன் அவர்களும்இ கவிதை நூல் விமர்சனத்தினை தமிழர் அரங்க உரிமையாளர் வி.சபேசன் அவர்களும் வழங்கினர்.
ஜேர்மனி எழுத்தாளர் சங்கம் வாழ்த்துமடல் வழங்கல்
ஜேர்மனி தமிழ்எழுத்தாளர் சங்க செயலாளர்
பொ. புத்தி சிகாமனி
கீத்தா பரமானந்தனை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையினர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தனர். தொடர்ந்து ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் நூலாசிரியைப்பாராட்டி வாழ்த்து மடல் வாசித்துக் கையளித்ததுடன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தனர்.
E.T.R வானொலி உரிமையாளர் திரு.ரவீந்திரன்
நிகழ்ச்சிகள் வரிசையில் செல்வி வேதிகா ஜெகதீசன் நடனம் ஆடி அரங்கைச் சிறப்பித்தார். செல்வன் ராம் பரமானந்தன், செல்வி அபிராமி பரமானந்தன்இ செல்விகள் சாதனா பதஞ்சலிஇ மயூரி பதஞ்சலி ஆகியோர் சங்கீத இசை வழங்கினர். திரு.பரமானந்தன் அவர்கள் நூலாக்கத்தில் ஏற்பட்ட சிரமங்களையும் கீதா அவர்களின் அற்பணிப்பினையும் பாராட்டடி தன் வாழ்த்தினை வழங்கினார். கீத்தா பரமானந்தன் ஏற்புரை வழங்க அபிராமி பரமானந்தன் நன்றியுரை வழங்கினார்.
தமிழ் அரங்கப் பொறுப்பாளர் திரு.சபேசன்