
எமது சங்கத்தின் அங்கத்தவர்களில் ஒருவராகச் சுமார் 15 ஆண்டுகள் இருந்திருந்து இச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பல விழாக்களில் கலந்துகொண்டு சொற்பொழி வாற்றியிருக்கிறார். இலங்கைப் இனப்போர் முடிந்து (18.05.2009) இலங்கையில் நடைபெற்ற அகில உலக எழுத்தாளர் மாகாநாட்டில் (10.01.2011) யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இலங்கை¸ இந்தியா¸ ஐரோப்பா¸ கனடா போன்ற நாடுகளிலிருந்து யேர்மனிக்கு வருகைதரும் எழுத்தாளர்களைக் கௌரவிப்பு வழங்கும்¸ மற்றும் நூல்களின் வெளியீட்டு விழாக்களிலும் பல தடவைகள் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். இப்படியாக இவர் செய்த பணிகளின் சிறப்பைக் கண்ட எமது எழுத்தாளர் சங்கம் “வாழும்போதே தமிழுக்குப் பணிபுரிந்தவர்களைக் கௌரவிக்க வேண்டும்” என்ற நல் நோக்கில் யேர்மனிவாழ் ஐந்து மூத்த எழுத்தாளர்களைக் சிறப்பிக்கும் நிகழ்வில் (27.04.2014) திரு பத்மபணசீலன் அவர்களையும் அழைத்து பொன்னாடை போர்த்தி பூமாலை அணிந்து பாராட்டிக் கௌரவம் செய்த பொன்னான நிகழ்வினை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றோம்
No comments:
Post a Comment