யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் இணையவழி நடத்தும் நினவஞ்சலி நிகழ்வு.
எமைவிட்டுப் பிரிந்த மூன்று ஈழத்தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கான அஞ்சலி நிகழ்வானது
எதிர்வரும் 21.02.21 ந்திகதி zoom செயலியூடாக நடைபெறவுள்ளது. தமிழிலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுகிறீர்கள்
Meeting-ID: 987 394 3047
Kenncode: ZKA6v1
மல்லிகை இதழ் ஆசிரியரும் எழுத்தாளருமாகிய டொமினிக் ஜீவா அவர்களின் நினைவலைகளை மீட்ட ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர்.தி.ஞானசேகரம் அவர்களை அழைத்திருக்கின்றோம். அவரை எம்முடைய சங்க உபதலைவர் பொன்னுத்துரை சிறி ஜீவகன் அவர்கள் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் அழைத்து வருவார் .
வண்ணை தெய்வம் என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் தெய்வேந்திரம் நாகேந்திரம் அவர்களின் நினைவேந்தலை எடுத்தவருகின்றார் எழுத்ததாளரும் சிறுகதை ஆசிரியருமான மனோ சின்னத்துரை அவர்களை அவரை அழைத்து வருபவர் எமது சங்கப் உதவிப் பொருளாளர் ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்கள்.
ஜெமினி என்று அழைக்கப்படும் அமரர் கனேஷ் கெங்காதரன் அவர்கள் நினைவலைகளைத் தாங்கி வருபவர் அறுவை என்னும் பத்திரிகை ஆசிரியர் வை.லோகநாதன் அவர்கள். அவரை அழைத்து வருபவர் எம்முடைய சங்க ஆலோசகர் வைரமுத்து சிவராஜா அவர்கள்
தலைமையுரையை எம்முடைய சங்கத்தின் தலைவர் அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் வழங்க வரவேற்புரையை சங்க உறுப்பினர் சாந்தினி துரைரங்கன் அவர்களும் நன்றியுரையை சங்கப் பொருளாளர் கீதா பரமானந்தன் அவர்கள் வழ்ங்குகின்றார்.
இந்நிகழ்வை சங்கச் செயலாளர் சந்திரகௌரி சிவபாலன் (எ) கௌசி ஒருங்கிணைப்புச் செய்கின்றார்